ஏழுமலையான் கோவிலுக்கு வைர, மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட தங்கக்கைகள் காணிக்கை
ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.3 கோடியில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 5.3 கிலோ எடையில் வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு ரூ.3 கோடியில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
அதை, கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பக்தரிடம் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தப் பக்தருக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.