இந்தியாவில் தினசரி பாதிப்பு 7,992 ஆக குறைந்தது
இந்தியாவில் தினசரி பாதிப்பு 7,992 ஆக குறைந்தது. கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலியும் 393 ஆக குறைந்தது.
புதுடெல்லி,
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது. இன்று நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனால் 393 பேர் இறந்துள்ளனர். இதுவரை நாட்டில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,75,128 ஆக உயர்ந்தது.
ஒரே நாளில் நாடு முழுவதும் இருந்து 9,265 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை நாட்டில் 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 331 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 277 ஆக அதிகரித்தது.
நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் 1,31,99,92,482 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,36,569 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.