அரசு கட்டமைப்பு சரியில்லாததால் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் - நிதின் கட்கரி

அரசின் கட்டமைப்பு சரியில்லாததால் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-11 03:13 GMT
புதுடெல்லி,

அரசின் கட்டமைப்பு சரியில்லாததால் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

கட்டுமான சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் பேசிய கட்காரி, நான் யார் மீதும் எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால், கட்டமைப்பு சரியில்லாத காரணங்களால் அதிகமான திட்டங்கள் தாமதமாகுகின்றன. முடிவெடுக்காததும், முடிவெடுக்க காலதாமதமாக்குவதும் அரசின் கட்டமைப்பில் மிகப்பெரிய பிரச்சினைகளாக உள்ளன’ என்றார்.  

மேலும் செய்திகள்