பிபின் ராவத் அஸ்தி நாளை ஹரித்வார் கொண்டு செல்லப்படும்; குடும்பத்தினர் தகவல்
பிபின் ராவத்தின் அஸ்தி நாளை ஹரித்வாருக்கு கொண்டு செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பிபின் ராவத்தின் அஸ்தி நாளை ஹரித்வாருக்கு கொண்டு செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பிபின் ராவத்தின் இளைய சகோதரர் விஜய் ராவத் இந்தத் தகவலை தெரிவித்தார்.