மும்பை-கொல்கத்தா சென்ற விமானத்தில் திடீர் கோளாறு

மும்பை-கொல்கத்தா சென்ற தனியார் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மீண்டும் திரும்பி வந்தது.

Update: 2021-12-09 18:24 GMT


மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகர் நோக்கி தனியார் விமானம் ஒன்று இன்று புறப்பட்டு சென்றுள்ளது.  இந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது.  அந்த விமானம் மும்பையில் பாதுகாப்புடன் தரையிறங்கியது.  இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்