காதலியின் திருமணத்தை நிறுத்த காதலன் செய்த அதிர்ச்சி செயல்!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலியின் திருமணத்தை நிறுத்துவதற்காக அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்யும் செயல் ஒன்றை செய்துள்ளார்.;

Update: 2021-12-09 10:02 GMT
ஹர்பூர்,

உத்தரபிரதேசம் ஹர்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால் பெண்ணின் வீட்டில் சம்மதிக்க வில்லை. இந்த நிலையில் வாலிபர் வேலை  காரணமாக வெளியூர் சென்று விட்டார். இதை தொடர்ந்து காதலியின் வீட்டில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து உள்ளனர். காதலியும் திருமணம் வேண்டாம் என  போராடி உள்ளார்.ஆனால் பெற்றோர்கள் மிரட்டி உள்ளனர். இறுதியில்  வேறு வழி இல்லாததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். 

அவருக்கு ஹர்பூர், புதாத் பகுதியில் திருமணம் நடைபெற்றது. மேடையில் திருமண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன, மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக்கொண்டு இருந்தனர்.  அப்போது முகத்தை துணியால் மறைத்து இருந்த வாலிபர் ஒருவர் திடீர் என தோன்றி மணமகளுக்கு வலுக்கட்டாயமாக நெற்றி  வகிட்டில் குங்குமம் வைத்துள்ளார். இதனை,  சுற்றி இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மணமகன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார். 

இதனை கண்ட மணமகளின் குடும்பம், அந்த வாலிபரை  அடிக்கத்தொடங்கியது. அதுமட்டுமின்றி போலீசை வரவழைத்து அவர் ஒப்படைக்கப்பட்டார். அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சென்ற பிறகு, திருமணம் முடிந்தது.

 திருமணத்தை நிறுத்த வேண்டும் அல்லது காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் காதலனே இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார். இந்திய திரைப்படங்களில், காதலி அல்லது மனைவியின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது உணர்வுபூர்வமான, காட்சியாக  பார்க்கப்படுகிறது.

நெற்றியில்  குங்குமம் வைத்தாலே அவர் காதலனுக்கு சொந்தம் என்றெல்லாம் காட்சிகள் வருகின்றன.  காதலனும், காதலியின் முகூர்த்த நேரத்தில் திருமண மண்டபத்தில் நுழைந்து இதனை செய்து உள்ளார்.

இந்த காட்சி வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதலங்களில் வைலராகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளார்கள். திரைப்படத்தில் வருவது போன்ற காட்சியை பார்த்து நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்