செல்லப் பிராணிக்கு பிறந்தநாள் வாழ்த்து...ஆரத்தி எடுத்த இன்போசிஸ் சுதா மூர்த்தி...! வைரலாகும் வீடியோ

தங்கள் செல்ல நாய் மீது இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி வைத்திருக்கும் அன்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Update: 2021-12-08 06:47 GMT
புதுடெல்லி ,

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின்  மனைவி சுதா மூர்த்தி.இவர் தனது வீட்டில் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு கோபி என பெயர் வைத்துள்ள அவர் சமீபத்தில் அதன் பிறந்தநாளை கொண்டாடினர்.

அந்த செல்ல நாயின் பிறந்தநாளை முன்னிட்டு  சுதா மூர்த்தி அவர்கள் அந்த நாய் கோபிக்கு ஆரத்தி  எடுத்து ஆசிர்வதிக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பின்னர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களும் ஆரத்தி திலகத்தை அந்த நாயின் நெற்றியில் வைக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பல ஆயிரம் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. தங்கள் செல்ல நாய் மீது இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி வைத்திருக்கும்  அன்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்