ஐ.ஐ.டி.களுக்கு தலைவர்கள் பெயர் சூட்டப்படுமா? மத்திய அரசு பதில்

‘‘ஐ.ஐ.டி.களுக்கு அந்தந்த மாநிலங்களின் தலைவர்கள் பெயர்கள் சூட்டும் திட்டம் இல்லை’’ என்று மந்திரி சுபாஷ் சர்கார் பதில் அளித்தார்.

Update: 2021-12-06 21:24 GMT
புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஐ.ஐ.டி.கள் அமைந்துள்ள மாநிலங்களை சேர்ந்த பெரிய தலைவர்களின் பெயர், அந்த ஐ.ஐ.டி.களுக்கு சூட்டப்படுமா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், ‘‘ஐ.ஐ.டி.களுக்கு அந்தந்த மாநிலங்களின் தலைவர்கள் பெயர்கள் சூட்டும் திட்டம் இல்லை’’ என்று பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்