விதிமீறி ஓட்டல் நடத்தும் நடிகர் சோனுசூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

பிரபல இந்தி வில்லன் நடிகர் சோனுசூட் தமிழில் ’கள்ளழகர்’, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Update: 2021-12-06 20:24 GMT
மும்பை,

பிரபல இந்தி வில்லன் நடிகர் சோனுசூட் தமிழில் ’கள்ளழகர்’, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். சோனுசூட் மும்பை ஜூஹு பகுதியில் தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். 

இந்த ஓட்டலுக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்றும், 6 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றி விட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதை எதிர்த்து சோனுசூட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு தள்ளுபடியானதை தொடர்ந்து கட்டிடத்தை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற சோனுசூட் சம்மதித்தார். இந்நிலையில், மும்பை மாநகராட்சி, நடிகர் சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘‘உறுதி அளித்தபடி ஓட்டலை குடியிருப்பு பகுதியாக மாற்றும் பணியை நீங்கள் தொடங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் கட்டிட மறுசீரமைப்பு பணியை தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்