பதிலுக்கு பதிலாக கெஜ்ரிவால் வீட்டு முன்பு சித்து போராட்டம்
கடந்த மாதம் 27-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஒப்பந்த ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
புதுடெல்லி,
கடந்த மாதம் 27-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஒப்பந்த ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
இந்தநிலையில், இதற்கு போட்டியாக, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு டெல்லி அரசு பள்ளிகளின் கவுரவ ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்றார்.
இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கவுரவ ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றாமல், தினக்கூலி அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை அவர்களது ஒப்பந்தத்தை புதுப்பித்து வருகிறது. டெல்லி அரசு பள்ளிகளில் 45 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. டெல்லி கல்வி மாடல், ஒப்பந்த மாடலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.