வட இந்தியாவில் வானில் தென்பட்ட ஒளி போன்ற பொருள்: மக்கள் அச்சம்
வட இந்தியாவில் வானில் மர்மமான முறையில் எரிந்த ஒளி போன்ற பொருளை கண்டு மக்கள் அச்சம் அடைந்தனர்.
புதுடெல்லி,
பஞ்சாப் வட இந்திய மாநிலங்களில் சில மர்மமான நகரும் விளக்குகள் திடீரென மாலை பொழுதில் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அறிக்கைகளின்படி, பதான்கோட் உட்பட பல இடங்களில் இந்த விளக்குகள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மர்மமான விளக்குகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது. இருப்பினும், பின்னர் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் அது ஒரு செயற்கைக்கோள் என்பதை உறுதிப்படுத்தின.
இது எலோன் மஸ்க் தலைமையிலான நிறுவனமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.