போலீசார் இல்லையெனில் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள்; நடிகை கங்கனா ரணாவத் குமுறல்

போலீசார் இல்லையெனில் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள் என நடிகை கங்கனா ரணாவத் குமுறலை வெளியிட்டு உள்ளார்.

Update: 2021-12-03 16:40 GMT


சண்டிகார்,

3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது குறித்து நடிகை கங்கனா ரணாவத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்து பதிவிட்டார்.  அதில், அவர் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை (காலிஸ்தான்) பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு கூறினார்.  மேலும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் மறைமுகமாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது சீக்கிய அமைப்பினர் மும்பை போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப்பில் ரோப்பர் பகுதியருகே நடிகை கங்கனா ரணாவத்தின் கார் சென்று கொண்டிருந்தது.  அந்த காரை, அங்கிருந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர்.  எனினும், போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்பின் நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலீசார் இங்கே இல்லையெனில் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள்.  இந்த மக்களால் அவமானம் என குமுறலாக பேசி உள்ளார்.

மேலும் செய்திகள்