‘எந்த நாட்டுக்கும் பயண தடை இல்லை’ வெளியுறவு அமைச்சகம் தகவல்
‘எந்த நாட்டுக்கும் பயண தடை இல்லை’ வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் நுழைந்துள்ள நிலையில் டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை” என தெரிவித்தார்.