மேற்கு வங்காளத்தில் ஊடுருவிய வங்காளதேச தம்பதி கைது; ஈரோட்டில் பணிபுரிந்தவர்கள்

மேற்கு வங்காளத்தில் ஊடுருவிய 2 வங்காளதேச நாட்டினரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.;

Update: 2021-12-02 16:11 GMT




வடக்கு 24 பர்கானாஸ்,

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கோஜடங்கா எல்லை பகுதி வழியே வங்காளதேச நாட்டை சேர்ந்த 2 பேர் ஊடுருவியுள்ளனர்.  அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி இன்று கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில் சட்டவிரோத ஊருடுவல் முயற்சி தெரிய வந்துள்ளது.  அவர்கள் இருவரும் கணவன், மனைவி என கூறியுள்ளனர்.  இதற்கு முன் அவர்கள் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் தொழிலாளர்களாக பணிபுரிந்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்