ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் உயர்வு - மத்திய அரசு தகவல்

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-30 19:26 GMT
புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்றால் பெரும் சரிவை சந்தித்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டான ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவீதமாக இருந்தது. 

கொரோனாவுக்கு பிறகு தொழில் உள்பட பல்வேறு துறையின் செயல்பாடு காரணமாக இந்த அளவுக்கு உயர்வு இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாகவே இருந்தது. அந்தவகையில் இந்த ஆண்டு பொருளாதாரம், வளர்ச்சியின் பாதையில் உள்ளதாக தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்து உள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக உயர்ந்து இருப்பதன் மூலம் விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்