கேரளாவில் முதல் முறையாக பழங்குடியினர் கிராமத்தில் 2 பேருக்கு கொரோனா

45 வயது பெண்ணுக்கும், இட்லிபாறை என்ற இடத்தை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டது.

Update: 2021-07-14 03:18 GMT
திருவனந்தபுரம், 

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் பஞ்சாயத்தாக எடமலக்குடி கிராம பஞ்சாயத்து விளங்கி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதும் அந்த பகுதி மக்கள் தீவிர கட்டுப்பாடுகளுடன் பிற கிராம மக்களை தங்கள் பகுதியில் அனுமதிக்காமலும், அந்த பகுதி மக்கள் வெளியிடங்களுக்கு செல்லாமலும் வாழ்ந்தனர். இதனால், கடந்த 1½ ஆண்டுகளாக ஒருவருக்கு கூட தொற்று இல்லை.

இந்த நிலையில், இந்த கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட இருப்பு கல்லு என்ற இடத்தை சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், இட்லிபாறை என்ற இடத்தை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து இருவரும் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடைேய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்