மணமகனுக்கு மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம்.. ஒரே ஒரு காரணத்தினால் திருமணம் செய்ய மறுத்த மணப்பெண்

மாப்பிள்ளை அரசு இன்ஜினீயர் என்றும் மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக கல்யாண புரோக்கர் கூறியுள்ளார்.

Update: 2024-11-28 15:24 GMT

லக்னோ,

திருமணத்தின்போது ஏற்படும் சிறு சிறு சண்டைகள் அல்லது விருந்து நிகழ்ச்சிகளில் மோதல் போன்ற காரணங்களால் கடைசி நேரத்தில் திருமணம் நின்று போன சம்பவங்கள் உண்டு. ஆனால் மணமகனுக்கு அரசு வேலை இல்லை என்பது தெரியவந்ததால் கடைசி நேரத்தில் மணமகள் தனது திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சத்தீஷ்கார் மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்த  என்ஜினீயர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மாப்பிள்ளை அரசு வேலையில் இருப்பதாகவும் மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும் அவரின் பெயரில் 6 வீட்டு மனைகள் மற்றும் 20 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் தற்போது வாடகை வீட்டில் வசிப்பதாகவும் கல்யாண புரோக்கர் மணமகள் வீட்டாரிடம் கூறியிருந்தார். அதற்கு சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றினர்.

பின்னர் மறுநாள் கல்யாணம் என்ற இருந்தநிலையில் அந்த நேரத்தில்தான் மாப்பிள்ளை அரசு என்ஜினீயர் இல்லை என்பதும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்ததால் மணமகள் அதிர்ச்சியடைந்து தனது திருமணத்தை நிறுத்தினார். இரு வீட்டாரும் மணமகளை சமாதானம் செய்ய முயன்றனர். மேலும் மாப்பிள்ளை தனது நிறுவனத்திற்கு போன் செய்து சம்பள ரசீதையும் பெற்று மணப்பெண்ணிடம் காட்டினார். கடைசிவரை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து திருமண ஏற்பாட்டிற்கான செலவை இருவீட்டாரும் பகிர்ந்து கொண்டனர். மணமகன் குடும்பத்தினர் மணமகள் இல்லாமல் சோகத்துடன் வீடு திரும்பினர். மணமகன் அரசு வேலையில் இல்லை என்ற இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மணப்பெண் திருமணம் செய்ய மறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்