மின்னணு-நீதிமன்றங்கள் சேவை செயலிக்கான கையேடு தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் வெளியீடு

இலவச மின்னணு-நீதிமன்றங்கள் சேவை செயலிக்கான கையேடு, தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-05-23 17:34 GMT
புதுடெல்லி,

மக்கள் மைய சேவைக்கான இலவச மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலிக்கான கையேட்டை தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் உச்சநீதிமன்ற வழக்கு தொடர்பான விவரங்களை, இலவசமாக எந்த நேரத்திலும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள், காவல்துறை, அரசு நிறுவனங்கள் மற்றும் வழக்கு தொடுக்கும் இதர நிறுவனங்களின் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி, இதுவரை 57 லட்சம், பதிவிறக்கங்களைக் கடந்துள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்