உ.பி.யில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேர் கைது
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுமி நேற்று இரவு ஆட்டோ ரிக்சாவில் வீட்டை விட்டு வெளியேறியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மந்து யாதவ் (19), அமித் பிரஜாபதி (22) ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.