புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-07 10:07 GMT
புதுடெல்லி,

புதுவையில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதாவது என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்கப்படுகிறது.  

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி ஜிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்