தெலுங்கானாவில் மேலும் 5,892- பேருக்கு கொரோனா தொற்று

தெலுங்கானாவில் மேலும் 5,892- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-07 05:32 GMT
ஐதராபாத்,

தெலுங்கனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,892- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 9,122- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக 46- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 73,851- ஆக உள்ளது. 

தெலுங்கானாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 640- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 லட்சத்து 05 ஆயிரத்து 164- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,625- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்