கர்நாடக சுகாதாரத்துறையில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

கர்நாடக சுகாதாரத்துறையில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-06 20:58 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, டாக்டர்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், டி பிரிவு ஊழியர்கள் என சுகாதாரத்துறையில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவர்களின் பணி காலம் ஏப்ரல் மாதம் தொடங்கி 6 மாதங்களுக்கு அதாவது வருகிற செப்டம்பர் மாதம் வரை வரையறுத்து நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்