காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி எம்.பி.க்களுடன் நாளை ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாட்டில் கொரோனா சூழல் பற்றி கட்சியின் அனைத்து எம்.பி.க்களுடனும் நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

Update: 2021-05-06 06:44 GMT
புதுடெல்லி,

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்புகளால் நாட்டில் நேற்று 3,980 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது கட்சியின் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களுடனும் நாட்டில் கொரோனா சூழல் பற்றி காணொலி காட்சி வழியே நாளை ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.  இதில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விசயங்கள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்