கர்நாடகாவில் புதிய உச்சமடைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு - 50 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 26 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர்.;

Update: 2021-05-05 14:45 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பு அம்மாநிலத்தில் புதிய உச்சமடைந்துள்ளது. 

கர்நாடக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில் மாநிலத்தில் ஒரேநாளில் 50 ஆயிரத்து 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 41 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 288 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 26 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 36 ஆயிரத்து 854 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், கொரோனா தாக்குதலுக்கு ஒரேநாளில் 346 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.  

மேலும் செய்திகள்