இந்தியாவிற்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை

பிரான்ஸ் நாட்டிலிருந்து 6-வது தவணையாக 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-05-05 12:10 GMT
புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.59 ஆயிரம் கோடியில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 18 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் 3 விமானங்கள் இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 3 ரபேல் போர் விமானங்களும் இன்று  நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்கள் வந்து சேர்வதன் மூலம், இந்தியாவிடம் இருக்கும் அதிநவீன ரபேல் போர்  விமானங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்