டெல்லி குருத்வாராவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சென்று வழிபட்ட பிரதமர் மோடி

டெல்லி குருத்வாராவில் குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சென்று வழிபட்டார்.

Update: 2021-05-01 03:47 GMT
புதுடெல்லி,

சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட அவரது பிறந்த தினத்தில் சீக்கியர்கள் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்துள்ளார்.  அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்று சிறப்பித்தனர்.  இதன்பின்னர் பிரதமர் மோடி, தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தினை முன்னிட்டு குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்டார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு எதுவும் செய்யப்படவில்லை.  இதேபோன்று பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் செய்திகள்