கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8 சதவீதம் வளர்ச்சி
கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி விகிதம் 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்டு, மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததால், சராசரியாக இந்த உயர்வு காணப்படுகிறது. அதே சமயத்தில், நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு பொருட்கள், உரம் ஆகியவற்றின் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது.