கொல்கத்தாவில் 8 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் திடீர் நீக்கம்
7 மற்றும் 8-வது கட்ட தேர்தல்களை சந்திக்கும் கொல்கத்தாவில் உள்ள 8 தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
இந்தநிலையில், 7 மற்றும் 8-வது கட்ட தேர்தல்களை சந்திக்கும் கொல்கத்தாவில் உள்ள 8 தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.
சவுரிங்கி, என்டல்லி, பவானிபூர், பெலியகடா, ஜோரசங்கோ, ஷ்யாம்புகுர், காசிபூர்-பெல்கச்சியா, கொல்கத்தா துறைமுகம் ஆகிய 8 தொகுதிகளுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் நீக்கப்பட்டிருப்பது, வழக்கமான நடவடிக்கைதான் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஆரிஸ் அப்தாப் தெரிவித்தார். அவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் அப்பணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், அந்த அதிகாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் வந்ததாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.