டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.;
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா தொற்று தற்போது வரை நீடிக்கிறது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் புதிதாக 3 ஆயிரத்து 548 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரப்பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து டெல்லியில் வருகிற 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.