உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி ரமணா நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்.

Update: 2021-04-06 05:22 GMT
புதுடெல்லி,


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியோடு முடிகிறது. அதனால் புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. இதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதி அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கக் கோரியிருந்தார். 

இதையடுத்து, என்.வி ரமணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார்.  இந்த பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி என்.வி ரமணாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.  வரும் 24 ஆம் தேதி 48-வது தலைமை நீதிபதியாக என்.வி ரமணா பதவியேற்க இருக்கிறார். 

மேலும் செய்திகள்