கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 32 பேர் பலி; 5279 பேர் பாதிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 5,279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 32 பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சுகாதாரத்துறை மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீவிர சிகிச்சை பிரிவு
கர்நாடகத்தில் நேற்று 97 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5,279 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 20 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 32 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானானோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து நேற்று 1,856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 65 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 345 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.
மைசூருவில் 165 பேர்
அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 3,728 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 22 பேர், பல்லாரியில் 40 பேர், பெலகாவியில் 17 பேர், பெங்களூரு புறநகரில் 34 பேர், பீதாில் 264 பேர், சாம்ராஜ்நகரில் 30 பேர், சிக்பள்ளாப்பூரில் 15 பேர், சிக்கமகளூருவில் 32 பேர், சித்ரதுர்காவில் 27 பேர், தட்சிண கன்னடாவில் 56 பேர், தார்வாரில் 55 பேர், கதக்கில் 13 பேர், ஹாசனில் 72 பேர், கலபுரகியில் 181 பேர், குடகில் 15 பேர், கோலாரில் 82 பேர், மண்டியாவில் 48 பேர், மைசூருவில் 165 பேர், ராய்ச்சூரில் 17 பேர், ராமநகரில் 16 பேர், சிவமொக்காவில் 24 பேர், துமகூருவில் 139 பேர், உடுப்பியில் 59 பேர், உத்தரகன்னடாவில் 51 பேர், விஜயாப்புராவில் 27 பேர், யாதகிரியில் 17 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் 18 பேர், மைசூருவில் 3 பேர், கலபுரகியில் 2 பேர், பல்லாரி, பீதர், ஹாவேரி, கோலார், மண்டியா, சிவமொக்கா, துமகூரு, விஜயாப்புரா, யாதகிரியில் தலா ஒருவர் என மொத்தம் 32 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு குறைவாக இருந்து வந்த நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து இருப்பது சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.