எதிரிகளின் ஏவுகணைகளிடம் இருந்து கப்பல்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
எதிரிகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து கடற்படை கப்பல்களை பாதுகாப்பதற்காக ‘சாப்’ என்ற அதிநவீன தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இது, சமீபத்தில் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதன் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. ஏவுகணைகளை வானில் வெற்றிகரமாக திசைதிருப்பியது. இதற்காக, டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.