பீகாரில் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூடல்: மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வன்முறை வெடித்தது

பீகாரில் கல்வி பயிற்சி நிறுவனங்களை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் மீது மாணவர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

Update: 2021-04-05 12:27 GMT
பாட்னா

பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஷாஷாராம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி பயிற்சி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷாஷாராம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாகக மாறியது. கற்களை வீசியும், அரசு சொத்துகளை சேதப்படுத்தியும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.இதையடுத்து, களமிறங்கிய போலீசார் ஆர்பாட்டக்காரர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதனிடையே வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பொதுகூட்டங்கள் மற்றும் சந்தை பகுதிகளுக்கு தடை விதிக்காத மாவட்ட நிர்வாகம், கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தடை விதித்தது சரியல்ல என்று மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்