லஞ்ச விவகாரம் சிபிஐ விசாரணை : மராட்டிய உள்துறை மந்திரி ராஜினாமா
100 கோடி லஞ்ச விவகாரம் மராட்டிய உள்துறை மந்திரி உள்துறை மந்திரியிடம் விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது இதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மும்பை
தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சமீபத்தில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றச்சாட்டு மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவர் முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் மந்திரி அனில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்து தருமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.இந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக்கை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் போலீசார் சிலரின் உதவியுடன் அனில் தேஷ்முக் மிரட்டி பணம் பறித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
லஞ்ச புகாருக்கு ஆளாகி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை முதலமைச்சர் இதுவரை ஏற்றுக்கொண்டதாக தகவல் இல்லை.