மராட்டியத்தில் முழு ஊரடங்குக்கு மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் எதிர்ப்பு
மராட்டியத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.;
மும்பை,
மராட்டியத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மராட்டிய அரசு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருப்பினும் பா.ஜனதாவினர் கொரோனா ஊரடங்கு விதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். ஏழை மக்களுக்கு எந்த வித நிவாரணமும் வழங்காமல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது அந்த மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் இந்த ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.