விசாரணை அமைப்புகள் சட்டப்படி தங்களது கடமையை செய்கின்றன - நிர்மலா சீதாராமன்
பிரதமர் மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சட்டப்படி தங்களது கடமையை செய்கிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.;
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சட்டப்படி தங்களது கடமையை செய்கின்றன. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஏராளமான புகார்கள் வந்த போது, அது குறித்து விசாரணை நடத்த விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கேரளாவில் இடதுசாரிகளின் 'பி' டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.