மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தவில்லை - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-04-03 22:31 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை 8 கட்ட தேர்தலை சந்திக்கிறது. இந்த மாநிலத்தில் ஏற்கனவே 2 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. மூன்றாவது கட்ட தேர்தல், 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க உள்ள ஹவுரா மாவட்டத்தில் பா.ஜ.க.வுக்காக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அங்கு அவர் வாக்காளர்களை கவரும் விதத்தில் வாகன பேரணி ஒன்றை நடத்திக்காட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

“திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி முன்னணியும் இந்த மாநிலத்தின் சூழலை மாற்றி விட்டனர். மாநிலத்தை தாஜா செய்யும் அரசியலுக்கு இரையாக்கி விட்டனர். இங்கு அடுத்த அரசை பா.ஜ.க. தான் அமைக்கும். அதைத்தான் இப்போதைய நிலைமை காட்டுகிறது.

இங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. மம்தா ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு இந்த மாநில மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்