மக்களவை தலைவர் ஓம் பிர்லா கொரோனாவில் இருந்து மீண்டார்
மக்களவை தலைவர் ஓம் பிர்லா கொரோனா தொற்றில் இருந்து மீண்டார்.
புதுடெல்லி,
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.
மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடந்த மார்ச் 19-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்தார்.