கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி...

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா முன்னெச்சரிக்க்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார்.

Update: 2021-04-03 08:43 GMT
ஸ்ரீநகர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 80 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு கடந்த 30-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பரூக் அப்துல்லா தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரூக் அப்துல்லா இன்று ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கூடுதல் கண்காணிப்புக்காக மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது தந்தை ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்