கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா: காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனிமைப்படுத்திக்கொண்டார்
கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரியங்கா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலை மாறியது. இன்று நாடு முழுவதும் 81,446- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள்,பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரியங்கா காந்தி கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் தனிமைபடுத்தி கொண்டார். இதன் காரணமாக இவரது தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.