கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.;

Update: 2021-04-02 07:13 GMT
புதுச்சேரி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், நாடு முழுவதும் நேற்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.  இதில் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.   

இந்நிலையில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். மேலும், அவர் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமையும் தொடங்கி அவர் வைத்தார்.

மேலும் செய்திகள்