கர்நாடகாவில் 2-வது நாளாக 4 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் இன்று 4,234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-01 15:50 GMT
பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று 4,234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,01,238 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,585 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,599 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,57,769 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 30,865 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்