6.00 மணி நிலவரம்: மேற்கு வங்காளத்தில் 80.43% அசாமில் 73.03% வாக்குப்பதிவு

6.00 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் 80.43% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 73.03% வாக்குகள் பதிவாகி உள்ளன.;

Update: 2021-04-01 13:02 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்திற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மாலை 6.00 மணி நிலவரப்படி 80.43% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 73.03%  வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்