காலை 9 மணி நிலவரப்படி: மேற்குவங்காளம் 13.14 %, அசாமில் 10.51% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்கு வங்காளத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் காலை 9 மணி நிலவரப்படி 13.14 சதவீத வாக்குகளும், அசாமில் 10.51 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

Update: 2021-04-01 05:52 GMT
கொல்கத்தா

மேற்குவங்காளத்திற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 

முதல்வர் மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும் பலப் பரீட்சை நடத்தும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்கு மெதினிபூர் மாவட்டத்தில் காரக்பூர் சாதர் தொகுதியில், வங்கமொழி திரைப்பட நடிகர் ஹிரோன் சட்டர்ஜி வாக்களித்தார். 191 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த 30 தொகுதிகளிலும் 10 ஆயிரத்து 620 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் பாஜக பூத் ஏஜெண்டுகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் மிரட்டப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.     

கட்டாலில் சிபிஐஎம் தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்  அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்களிக்க செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினர்

பின்னர், பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை அடைந்து சாலை முற்றுகையை அகற்றினர்.

மேற்கு வங்காளத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும்  காலை 9 மணி நிலவரப்படி 13.14 சதவீத வாக்குகளும், அசாமில் 10.51 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மார்ச் 27 ம் தேதி முதல் கட்ட வாக்களிப்பில், மேற்கு வங்காளம்  மற்றும் அசாம் முறையே 84.63% மற்றும் 79.97% வாக்குகளைப் பதிவு செய்தன.       

மேலும் செய்திகள்