உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நாளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை
மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடும் நாளில், அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில், கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்காக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடும் நாளில், அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.இதுபோல், தனியார் ஊழியர்களுக்கும் விடுமுறை வசதி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.