கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.;
லக்னோ,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வ்ருகிறது. இதுவரை மொத்தம் 2 கோடி 80 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்மந்திரியுமான மாயாவதி இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். 65 வயதான மாயாவதி லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டப்பின் பேசிய மாயாவதி, ’ஏழை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கவேண்டும். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.