டெல்லி, ஆந்திராவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

டெல்லி, ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நேற்றைய நிலவரம் வெளியிடப்பட்டது.;

Update: 2021-03-09 19:32 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

டெல்லி, ஆந்திரா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் நேற்றைய நிலவரம் வெளியிடப்பட்டது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் நேற்று புதிதாக 118 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,90,884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 89 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 8,82,670 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,176 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி மாநிலத்தில் நேற்று புதிதாக 320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மொத்தம் 6,41,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று 4 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 10,928 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தமாக 6,28,920 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்