மராட்டிய மாநிலத்தில் இன்று 9,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 9,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 9,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,38,398 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52,556 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் அங்கு இன்று ஒரே நாளில் 12,182 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் தற்போது 95,322 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 20,89,294 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.