எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. காலையில் மாநிலங்களவை கூடியவுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா உள்ளிட்டோரின் மறைவுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் முடங்கியது.
இந்த நிலையில், இன்று மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டுள்ளது. அமளி நீடித்ததால், 12 மணிக்கு வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். அதேபோல், மக்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும், உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.