ஒடிசாவில் கொலை குற்றவாளிகள் 2 பேர் மீது கொலைவெறி தாக்குதல்; 5 பேர் கைது
ஒடிசாவில் கொலை குற்றவாளிகள் 2 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;
புவனேஸ்வர்
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் சி.ஆர்.பி. சதுக்கத்தில் சென்று கொண்டிருந்த போலீஸ் வேனை மறித்து அதில் இருந்த 2 பேரை 5 பேர் கொண்ட கும்பல் பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவற்றை கொண்டு கடுமையாக தாக்கியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் தாஸ் உள்பட 5 பேரை சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் போலீஸ் வேனும் அடித்து நொறுக்கப்பட்டது.
அந்த 2 பேரும் சுய பாதுகாப்பிற்காக இளைஞர் ஒருவரை ஆயுதங்களால் தாக்கி கொன்றுள்ளனர். இதில், கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்படும்பொழுது அவர்களை இந்த கும்பல் தாக்கியுள்ளது. இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.